ஸ்ரீ தென்காசி ஷீரடி வைத்திய சாயி கோயிலின் அன்றாட பராமரிப்பு செலவுகளைச் சமாளிக்க, "வைத்திய சாயி புரவலர்" என்ற திட்டத்தை கோயில் நிர்வாகம் உருவாக்கியுள்ளது.

கட்டணம்: ₹1,800 (ரூபாய் ஆயிரத்து எண்ணூறு) ஆறு மாதங்களுக்கு அல்லது ₹3,600 (ரூபாய் மூவாயிரத்து அறுநூறு) பன்னிரண்டு மாதங்களுக்கு

திட்டத்தின் சிறப்பு அம்சங்கள்: புரவலர் பெயரில் இரண்டு அல்லது நான்கு நாட்களுக்கு பூஜை, ஆலோசனைக் குழுவின் உறுப்பினர், மற்றும் இரண்டு முதல் நான்கு நாட்கள் வரை கோயிலில் தங்கியிருந்து சேவை செய்யும் வாய்ப்பு.

இந்தத் திட்டத்தில் சேர ஆர்வமுள்ளவர்கள் தயவுசெய்து ஆலய நிர்வாகத்தினரைத் தொடர்பு கொள்ளவும். மேலும் விவரங்களுக்கு படிவத்தைப் பார்க்கவும்.

தொடர்பு கொள்ள: 75983 80374, 98947 07352, 99521 40090


வைத்திய சாயி புரவலர் தகவல் மற்றும் படிவம் பதிவிறக்கம் செய்க


பக்கம் 1 (அட்டை)

பக்கம் 2 (தகவல்)

பக்கம் 3 (படிவம் பக்கம் 1)

பக்கம் 4 (படிவம் பக்கம் 2)

உன்னைப் பற்றி (உனக்கு எதிராக) யாராவது பேசினால், சற்றும் கலங்காது சென்றுவிடு. அவருடைய சொற்கள் உன் உடலைத் துளைத்துவிட முடியாது. பிறருடைய செயல்கள் அவர்களையே பாதிக்கும். உன்னை அல்ல. உன்னுடைய செயல்கள் மட்டுமே உன்னைப் பாதிக்கும்.

- ஷீரடி சாயி பாபா

ஸ்ரீ சாயி சித்திர சரிதம் - புத்தக முன்னோட்டம்

ஸ்ரீ சாயி சித்திர சரிதம்

கொரோனா: தரிசனம் ரத்து

தமிழக அரசால் கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்கும் விதமாக பேரிடர் என அறிவிக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக, பொதுநலன் கருதி, பக்தர்கள் ஒன்று கூடுவதைத் தவிர்க்கும் பொருட்டு, ஏப்ரல் 26, 2021 (திங்கட்கிழமை) முதல் மங்கம்மா சாலையில் உள்ள வைத்திய சாயிபாபா கோயிலில் பக்தர்கள் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

மறு அறிவிப்பு வரும்வரை சாயி பக்தர்கள் கோயிலுக்கு வருவதைத் தவிர்க்கவும்.

பாபாவிற்கு ஆரத்தி மற்றும் பூஜைகள் வழக்கம் போல் நடைபெறும்.

- கோயில் நிர்வாகம்