தென்காசி ஷீரடி வைத்திய சாயி பிரார்த்தனைக் கூடம்!

மேற்குத்தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் தென்காசி நகரம் அமைந்துள்ளது. தென்காசி அதன் சாரலுக்குப் பிரபலமானது. தற்போது, இங்கு, ஷீரடி சாயி பாபா பக்தர்களை ஆன்மீக மழையில் நனைக்க, ஒரு புதிய "தென்காசி ஷீரடி வைத்திய சாயி" கோயில் உருவாகியுள்ளது. பக்தர்கள் கோயிலை விஜயம் செய்து பாபாவின் அருளைப் பெற கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

பொறாமை என்கிற வேண்டாத குணத்தைப் பொறுத்த வரை நமக்கு எந்த விதமான (நேரிடை) லாபமோ, நஷ்டமோ கிடையாது. பொறாமை என்பது இன்னொருவருக்குக் கிட்டியிருக்கும் லாபம் அல்லது வளம் கண்டு தாளாமை. வேறு ஒருவருக்கு ஒரு அதிருஷ்டமோ, செல்வாக்கோ கிட்டி விட்டால், நம்மால் அதைச் சகித்துக் கொள்ள முடியாமல், அவரை அவதூறாகப் பேசுகிறோம். அவருக்கு நஷ்டம் ஏற்பட்டுவிட்டால் மகிழ்ச்சியடைகிறோம். இது நல்லதா? அந்த மனிதன் வளம் பெற்றால், நமக்கு என்ன நஷ்டம் ஏற்பட்டுவிட்டது? ஆனால், ஜனங்கள் இந்த விதத்தில் சிந்திப்பதில்லை. அவனுக்கு நலம் கிட்டினால் (அவனுடன் சேர்ந்து) நாமும் மகிழ்வோமே. "நமக்கும் நலம் கிட்டியது. நாமும் பாக்கியசாலிகள்" என எண்ணுவோமே. அல்லது அதே நலம் நாமும் பெறுவோம், அல்லது பெறுவதற்கு முயற்சி மேற்கொள்வோம். அதுவே, நமது விருப்பமும், தீர்மானமுமாக இருக்க வேண்டும். நம்மிடமிருந்து அவன் எதை எடுத்துச் சென்றுவிட்டான்? ஒன்றுமில்லை. அவனுடைய கர்மாவின் பலனாக அவன் வளம் பெற்றான்.அப்படியிருக்க அதைக் கண்டு நாம் ஏன் பொறாமைப்பட வேண்டும்? ஆகவே, முதலில் பொறாமையை வென்றுவிடு.

- ஷீரடி சாயி பாபா

இனி வரும் நிகழ்வுகள்

பிப்ரவரி 27, 2018
செவ்வாய்க்கிழமை
5:30 மாலை - 6:00 மாலை
பிரதோஷ வழிபாடு

மார்ச் 1, 2018
வியாழக்கிழமை
4:00 மாலை - 5:00 மாலை
சத்யநாராயண பூஜை

மார்ச் 14, 2018
புதன்கிழமை
5:30 மாலை - 6:00 மாலை
பிரதோஷ வழிபாடு

மார்ச் 29, 2018
வியாழக்கிழமை
5:30 மாலை - 6:00 மாலை
பிரதோஷ வழிபாடு

மார்ச் 31, 2018
சனிக்கிழமை
4:30 மாலை - 5:30 மாலை
சத்யநாராயண பூஜை