ஷீரடியில் ஒவ்வொரு வியாழக்கிழமையும் இரவு 9:00 மணி அளவில் பல்லக்கு சேவை நடைபெறுகிறது. இதில், சாயி பாபாவின் திருவுருவப் படம் மற்றும் பாதம் முதலியவை சமாதி மந்திரில் இருந்து துவாரகமாயி மற்றும் சாவடிக்கு பல்லக்கு மூலம் எடுத்துச் செல்லப்படுகிறது.
பக்தர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, தென்காசி ஷீரடி வைத்திய சாயி கோயிலிலும் பல்லக்கு சேவை ஒவ்வொரு வியாழக்கிழமையும் இரவு 7:00 மணி அளவில் நடைபெறுகிறது.
சேவைக் கட்டணம்: ₹900/- (ரூபாய் தொள்ளாயிரம்)
பக்தர்கள் முன்பதிவு செய்து கொண்டு, பாபாவின் அருள் பெற அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
- கோயில் நிர்வாகம்
தொடர்பு கொள்ள: 75983 80374, 99430 80374