தென்காசி ஷீரடி வைத்திய சாயி கோயிலில் ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் மாலை 4:00 மணி அளவில் ஸ்ரீ சத்யநாராயண பூஜை நடத்தப்படுகிறது. இந்த பூஜை ஷீரடியில் எவ்வாறு நடத்தப்படுகிறதோ, அதே போன்று இங்கும் நடத்தப்படுகிறது.

ஸ்ரீ சத்யநாராயண பூஜையின் பலன்கள்:

  • ஏழ்மை விலகி செல்வம் பெருகும்
  • பொய் வழக்குகளில் இருந்து விடுதலை
  • திருமண யோகம், குழந்தைச் செல்வம்
  • புகழ், கெளரவம், செல்வம்
  • அந்தஸ்து, அதிகாரம், பதவி

நினைத்த காரியங்கள் நிறைவேற, பக்தர்கள் ஸ்ரீ சத்யநாராயண பூஜையில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பூஜையில் தம்பதிகளாகக் கலந்துகொள்வது மிகவும் சிறப்பு.  தனி நபராகவும் கலந்து கொள்ளலாம்.

பூஜைக்குரிய அனைத்துப் பொருட்களும் நிர்வாகத்தினரால் வழங்கப்படுகின்றன.

பூஜை முன்பதிவிற்குக் கோயில் நிர்வாகத்தினரைத் தொடர்பு கொள்ளவும்.

தொடர்பு கொள்ள: 75983 80374, 99521 40090

குறிப்பு: தென்காசி ஷீரடி வைத்திய சாயி கோயிலில் நவக்கிரக பூஜை, பொதுவாக, ஸ்ரீ சத்யநாராயண பூஜைக்கு முந்தைய நாள் நடத்தப்படும்.



2021-ஆம் ஆண்டிற்கு இன்னும் திட்டமிடப்படவில்லை

தொடர்பு கொள்ள
ஸ்ரீ ராமகிருஷ்ண சேவை நிலையம்
"சாயி பூமி"
306, களகோடித் தெரு
தென்காசி 627 811
தமிழ்நாடு, இந்தியா
   +91 75983 80374
   +91 99430 80374
  tenkasishirdi (at) gmail.com
தகவல்

கோயில் நேரங்கள்:
  காலை 6:00 - மதியம் 1:00
  மாலை 4:00 - இரவு 8:00

ஆரத்தி நேரங்கள்:
  காலை 6:15, மதியம் 12:15
  மாலை 6:30, இரவு 7:30

குறிப்பு: நேரங்கள் சாதாரண நாட்களுக்கு மட்டுமே பொருந்தும். சிறப்பு நாட்களில் நேரங்கள் மாறுபடும்.

உனது பிரேமையைத் தவிர வேறு எதையும் நான் விரும்பவில்லை. செயல் புரியாததுபோல் நான் காணப்படினும், ஒருபோதும் உன்னைக் கவனியாமல் இருந்தது இல்லை. என்னுடைய கிருபையால், நீ இப்போதைய நிலையை அடையப் பெற்றிருக்கிறாய்.

- ஷீரடி சாயி பாபா