தென்காசி ஷீரடி வைத்திய சாயி திருக்கோயிலில் பிரதோஷ நாட்களில் நந்தி பகவானுக்கு மாலை 5:30 மணி அளவில் சிறப்பு வழிபாடு/பூஜை நடத்தப்படுகிறது.

பிரதோஷ நாள் வழிபாட்டுப் பலன்கள்:

  • ஞாயிறு பிரதோஷம் - சுப மங்களத்தைத் தரும்
  • திங்கள் சோம பிரதோஷம் - நல்ல எண்ணம், நல்ல அருள் தரும்
  • செவ்வாய் பிரதோஷம் - பஞ்சம், வறுமை, பட்டினி அகலும்
  • புதன் பிரதோஷம் - நல்ல புத்திர பாக்கியம் தரும்
  • வியாழன் பிரதோஷம் - திருமணத்தடை விலகி மாங்கல்ய பலன் கிட்டும்
  • வெள்ளி பிரதோஷம் - எதிரிகள், எதிர்ப்பு விலகும்
  • சனிப் பிரதோஷம் - அனைத்துத் துன்பங்களும் விலகும்

குறிப்பு: ஒரு சனிப் பிரதோஷ வழிபாடு ஆனது 108 சிவ பூஜைகள் செய்த பலன் தரும். ஆதலால், சனிப் பிரதோஷம் ஆனது "மகா பிரதோஷம்" என்று அறியப்படுகிறது.

- கோயில் நிர்வாகம்

தொடர்பு கொள்ள: 99430 80374, 75983 80374


தொடர்பு கொள்ள
ஸ்ரீ ராமகிருஷ்ண சேவை நிலையம்
"சாயி பூமி"
306, களகோடித் தெரு
தென்காசி 627 811
தமிழ்நாடு, இந்தியா
   +91 75983 80374
   +91 99430 80374
  tenkasishirdi (at) gmail.com
தகவல்

கோயில் நேரங்கள்:
  காலை 6:00 - மதியம் 1:00
  மாலை 4:00 - இரவு 8:00

ஆரத்தி நேரங்கள்:
  காலை 6:15, மதியம் 12:15
  மாலை 6:30, இரவு 7:30

குறிப்பு: நேரங்கள் சாதாரண நாட்களுக்கு மட்டுமே பொருந்தும். சிறப்பு நாட்களில் நேரங்கள் மாறுபடும்.

குலம் ஏதானாலும் அனைவரிலும் இருக்கும் இரத்தம் ஒன்றே. உண்ணும் உணவும் ஒன்றே. குலப்பிறப்பால் ஒருவர் உயர்ந்தவர் என்ற எண்ணம், பரிபூரண அஞ்ஞானத்தால் உண்டாகிறது என்பது பொருந்தும்.

- ஷீரடி சாயி பாபா