வழி காட்டலுக்கு "பெரிய மேப்பைப் பார்க்கவும்"-இல் சொடுக்கவும்

தொடர்பு கொள்ள
ஸ்ரீ ராமகிருஷ்ண சேவை நிலையம்
"சாயி பூமி"
306, களகோடித் தெரு
தென்காசி 627 811
தமிழ்நாடு, இந்தியா
   +91 75983 80374
   +91 99430 80374
  tenkasishirdi (at) gmail.com
தகவல்

கோயில் நேரங்கள்:
  காலை 6:00 - மதியம் 1:00
  மாலை 4:00 - இரவு 8:00

ஆரத்தி நேரங்கள்:
  காலை 6:15, மதியம் 12:15
  மாலை 6:30, இரவு 7:30

குறிப்பு: நேரங்கள் சாதாரண நாட்களுக்கு மட்டுமே பொருந்தும். சிறப்பு நாட்களில் நேரங்கள் மாறுபடும்.

பொறாமை என்கிற வேண்டாத குணத்தைப் பொறுத்த வரை நமக்கு எந்த விதமான (நேரிடை) லாபமோ, நஷ்டமோ கிடையாது. பொறாமை என்பது இன்னொருவருக்குக் கிட்டியிருக்கும் லாபம் அல்லது வளம் கண்டு தாளாமை. வேறு ஒருவருக்கு ஒரு அதிருஷ்டமோ, செல்வாக்கோ கிட்டி விட்டால், நம்மால் அதைச் சகித்துக் கொள்ள முடியாமல், அவரை அவதூறாகப் பேசுகிறோம். அவருக்கு நஷ்டம் ஏற்பட்டுவிட்டால் மகிழ்ச்சியடைகிறோம். இது நல்லதா? அந்த மனிதன் வளம் பெற்றால், நமக்கு என்ன நஷ்டம் ஏற்பட்டுவிட்டது? ஆனால், ஜனங்கள் இந்த விதத்தில் சிந்திப்பதில்லை. அவனுக்கு நலம் கிட்டினால் (அவனுடன் சேர்ந்து) நாமும் மகிழ்வோமே. "நமக்கும் நலம் கிட்டியது. நாமும் பாக்கியசாலிகள்" என எண்ணுவோமே. அல்லது அதே நலம் நாமும் பெறுவோம், அல்லது பெறுவதற்கு முயற்சி மேற்கொள்வோம். அதுவே, நமது விருப்பமும், தீர்மானமுமாக இருக்க வேண்டும். நம்மிடமிருந்து அவன் எதை எடுத்துச் சென்றுவிட்டான்? ஒன்றுமில்லை. அவனுடைய கர்மாவின் பலனாக அவன் வளம் பெற்றான்.அப்படியிருக்க அதைக் கண்டு நாம் ஏன் பொறாமைப்பட வேண்டும்? ஆகவே, முதலில் பொறாமையை வென்றுவிடு.

- ஷீரடி சாயி பாபா