தலைப்பு:   தென்காசி ஷீரடி வைத்திய சாயி திருக்கோவில் கும்பாபிசேகம்
தேதி:   மார்ச் 13, 2014 (வியாழக்கிழமை)
மூலம்:   KutralamLive.com
வெளியீடு:    
ஊடகம்:   இணையதளம்
மொழி:   தமிழ்
 

தென்காசி ரயில் நிலையம் அருகில் உள்ள மங்கமாள் சாலையில் உள்ள ஸ்ரீராமகிருஷ்ண சேவா மையத்தில் (சக்தி போதை மறுவாழ்வு மையம்) புதிதாக கட்டப்பட்ட ஷீரடி வைத்திய சாயி திருக்கோவில் கும்பாபிசேகம் திருவிழா, வியாழக்கிழமையன்று (13.03.2014) காலை 10.00 மணியளவில் சிறப்பாக நடைபெற்றது. மூன்று நாள் நடைபெற்ற யாகசாலையில் பூஜை செய்த கும்பங்கள் கொண்டு கோபுர கலசங்களுக்கும்,மூலவர் சாய் பாபாவிற்கும் அபிசேகம் செய்யப்பட்டது. சாய் பாபாவிற்கு சிறப்பு அபிசேகங்கள் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் பூஜைகள் நடைபெற்றது. இவ்விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.


செய்தியின் இணையமுகவரி: http://www.kutralamlive.com/index.php/news-events/277-2014-03-13-16-47-51

தொடர்பு கொள்ள
ஸ்ரீ ராமகிருஷ்ண சேவை நிலையம்
"சாயி பூமி"
306, களகோடித் தெரு
தென்காசி 627 811
தமிழ்நாடு, இந்தியா
   +91 75983 80374
   +91 99430 80374
  tenkasishirdi (at) gmail.com
தகவல்

கோயில் நேரங்கள்:
  காலை 6:00 - மதியம் 1:00
  மாலை 4:00 - இரவு 8:00

ஆரத்தி நேரங்கள்:
  காலை 6:15, மதியம் 12:15
  மாலை 6:30, இரவு 7:30

குறிப்பு: நேரங்கள் சாதாரண நாட்களுக்கு மட்டுமே பொருந்தும். சிறப்பு நாட்களில் நேரங்கள் மாறுபடும்.

சர்வ ஜீவன்களிலும் அப்பரமனே உள்ளான் என்று யார் அறிந்து நடந்து கொள்கிறார்களோ, அப்படிப்பட்டவர்களை இறைவன் தவறாமல் காத்தருள்வார். இந்த சிருஷ்டிக்கு, மூலம் அந்த பரமாத்மனே. சர்வ ஜீவன்களுக்கும் தாயும் தந்தையும் அவரே.

- ஷீரடி சாயி பாபா